லியோ விமர்சனம்

 

காஷ்மீரில் தன் மனைவி த்ரிஷா மற்றும் ஒரு மகன், மகளோடு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பார்த்திபன்(விஜய்), ஒரு காபி ஷாப் வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நாள், மிஷ்கினின் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் பார்த்திபன் அவர்களைக் கொல்கிறார். இதனால், பார்த்திபன் மீது வழக்கு தொடரப்படுகிறது. விசாரணையின் போது, பார்த்திபன் ஒரு குற்றவாளி அல்ல என்பதை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள். இந்த வழக்கில் பார்த்திபனை தேடி அவரது தந்தை தாஸ் (சஞ்சய் தத்) காஷ்மீருக்கு வருகிறார். பார்த்திபன் தான் லியோ என்ற தகவலை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால், பார்த்திபன் தான் லியோ இல்லை என்று மறுக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.


விஜய் இதுவரை பார்த்த படங்களிலிருந்து முற்றிலும் மாறு பட்ட கதாப்பாத்திரம் கொஞ்சம் நரைத்த தாடி, மீசை வயதான அப்பா கதாப்பாத்திரையிலும். ப்ளாஷ்பேக் காட்சிகளில் இளமையான அதிரடியான வில்லத்தனமான கதாப்பாத்திரத்தை காட்டி நம்மை விசில் பறக்க வைக்கிறார்.  த்ரிஷா படத்தில் தனது வேலையை மிக மிக சிறப்பாக செய்துள்ளார். படத்தின் வில்லன்களாக வரும் சஞ்சய் தத், அர்ஜீன் இருவரும் மிரட்டியுள்ளனர். மிஷ்கின், சாண்டி, போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேனன், பிரியா ஆனந்த் அனைவருமே அருமையாக நடித்துள்ளனர்.


அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது அதுவும் பின்னணி இசையில் தூள் கிளப்பி உள்ளார். படத்தில் அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சண்டை பயிற்சியாளர் அன்பறிவு அனைத்தும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் லியோ சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இன்னும் கூட கத்திரியை உபயோகப்படுத்தி படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி ஒரு மினிமம் கேரன்டி ஹிட் படமாக இந்த லியோ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

0 comments:

Pageviews