எனக்கு எண்டே கிடையாது விமர்சனம்

 

கதையின் நாயகி ஸ்வயம் சித்தா இரவு பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே வருகிறார். வீட்டுக்கு செல்வதற்காக கார் ஒன்றை புக்கிங் செய்கிறார்.


வீட்டிற்கு செல்லும் வழியில் டிரைவருடன் பேசி நட்பாக பழகி வீட்டிற்கு வந்து சரக்கடிக்க சொல்கிறார். அப்போது நாயகன் விக்ரம் ரமேஷ் தயங்கவே வீட்டில் யாரும் இல்லை வாருங்கள் என அழைக்கிறார்.


வீட்டில் தனிமை.. போதை இரண்டும் கலக்கவே உடலுறவு கொள்கின்றனர். காலையில் எழுந்து பார்க்கும் போது இறந்து கிடக்கிறார் நாயகி.


என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஒரு திருடனும் வந்திருக்கிறான். இருவரும் ஏதாவது செய்து தப்பி செல்ல நினைக்கையில் நாயகியை காண அரசியல்வாதி ஒருவரும் வருகிறார். இந்த மூவரும் வீட்டில் சிக்கிக் கொள்கின்றனர்.


வீட்டிற்கு சாவி ஏதும் இல்லாத நிலையில் பாஸ்வேர்டு மட்டுமே கதவைத் திறக்க இருக்கும் நிலையில் திடீரென லாக் ஆகிவிடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? கொலைக்காரன் யார்? கதவு அன்லாக் செய்யப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.


ஒரே அறை.. மொத்தம் 5-6 நட்சத்திரங்கள் என்று சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் விக்ரம் ரமேஷ். இவரே இயக்குனர் இவரே நாயகன் என்பதால் இரண்டு பொறுப்புகளையும் உணர்ந்து அதற்கு ஏற்ப கதைக்களம் அமைத்து சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார்.


தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். பதட்டம் துள்ளல் ஆகிய சூழ்நிலை ஏற்ப இசை வடிவத்தை கொடுத்துள்ளார்.


ஒளிப்பதிவாளரின் கைவண்ணமும் பாராட்டுக்குரியது. ஒரே வீட்டில் ஒரே அறை திரும்பத் திரும்பக் காட்டப்பட்டாலும் அவர் கொடுத்துள்ள லைட்டிங் கேமரா ஆங்கிள் அனைத்தும் வேற லெவல்.


எனக்கு எண்டே கிடையாது படத்தை ரசித்து கொண்டாடலாம்.

0 comments:

Pageviews