பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் ரா ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம். குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம்.
கடந்த 20 நாட்களாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு வந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற விறுவிறுப்பான அதிரடியான மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
இப்படத்தில் கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த 'தூக்குடு' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்குனர் சீனு வைட்லா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment