இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது

 

நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக சாதனைகளை முறியடித்து வருகிறது.  இந்தி திரையுலகில் இதுவரை நிகழாத சாதனையை ஜவான் படம் செய்துள்ளது. இப்படம்  உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில்  1100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வெளியானது முதல் எந்த தடுமாற்றமும் இன்றி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 1103.27 கோடி வசூல் செய்து வரலாறு படைத்திருக்கிறது.  இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடியை தாண்டிய முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் 733.37 கோடியாக உள்ளது, மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 369.90 கோடி ஆகும்.


இது தவிர, உள்நாட்டு சந்தையிலும் ஜவான் தனது வலுவான கால்களை பதித்துள்ளது. இந்தியாவில், இந்தி மொழிப்பதிப்பிலிருந்து மட்டும் வசூல் 560.03 கோடியை எட்டியுள்ளது. மேலும் படம் 600 கோடி வசூலை விரைவில் எட்டவுள்ளது . இப்படத்தின் பிற மொழி டப்களின் வசூல் 59.89 கோடி. மொத்தமாக இப்படம் 619.92 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில், 600 கோடியை தாண்டியுள்ளது. இன்னும் நல்ல நல்ல வசூலை ஈட்டி வருகிறது.


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 


0 comments:

Pageviews