மார்க் ஆண்டனி விமர்சனம்

 

1975ல் விஞ்ஞானி செல்வராகவன் ஒரு டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கிறார். அதன்மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதுடன், அவர்கள் மூலமாக நடந்த நிகழ்வுகளையும் மாற்றி அமைக்கும் வசதி அந்த டெலிபோனில் கிடைக்கிறது, பல வருடங்களுக்குப் பிறகு அந்த டெலிபோன் 1995ல் கார் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் விஷாலின் கைகளில் கிடைக்கிறது, தாதாவான எஸ்.ஜே சூர்யா தனது நண்பன் (அவரும் விஷால் தான்) மகனான விஷாலை தனது சொந்த பிள்ளை போல வளர்த்து வருகிறார். விஷால் மெக்கானிக் செட் வைத்திருக்கிறார்.


அதேசமயம் எஸ்.ஜே சூர்யாவின் மகன் இளைய எஸ் ஜே சூர்யா தாதா ஆக வேண்டும் என முயற்சிக்கிறார். ஏற்கனவே தனது தாயை கொன்றுவிட்டார் என தந்தை மீது வெறுப்பில் இருக்கும் விஷாலுக்கு இந்த டைம் டிராவல் தொலைபேசி மூலமாக தன் தந்தை நல்லவர் என்றும் அவரை கொன்றது யார் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம் நடந்த தவறை நடக்க விடாமல் தடுத்து தனது தந்தையை காப்பாற்ற முயற்சி செய்கிறார் விஷால்.


இது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது, அதை தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்படும் குளறுபடிகள் என்ன, அதை எல்லாம் விஷால் எப்படி சமாளித்தார், விஷாலின் நண்பனாக அதே சமயம் தாதாவாக ஆசைப்படும் எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த டைம் டிராவல் தொலைபேசியால் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் என்னென்ன இடைஞ்சல்கள் ஏற்படுகிறது என்பது மீதிக்கதை.


ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் விஷால் வரும் காட்சிகள் அனைத்தும் மாஸ். சண்டைக்காட்சிகளில் ஆண்டனியாக தெறிக்கவிடும் விஷால், வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு அமர்க்களப்படுத்துகிறார். மகன் மார்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால், தந்தை வேடத்திற்கு எதிர்மறையான சாதுவான வேடம் என்பதால், அடக்கி வாசித்திருப்பதோடு, நடிப்பு வித்தையை மொத்தமாக இறக்கு முயற்சித்திருக்கிறார். ஆனால், அதில் இயல்பாக அல்லாமல் கஷ்ட்டப்பட்டு நடித்திருப்பவர் சில இடங்களில் சொதப்பவும் செய்திருக்கிறார்.


நாயகன் விஷாலை விட பல இடங்களில் எஸ்.ஜே.சூர்யா ஜொலிக்கிறார். அவரது வழக்கமான நடிப்பு மூலம் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களையும் கையாண்டிருந்தாலும், அவரது ஒவ்வொரு அசைவும் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களை ஆர்பரிக்க செய்கிறது. அதிலும், தந்தை மற்றும் மகன் எஸ்.ஜே.சூர்யா இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல் காட்சி ரசிகர்களை எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. இப்படி படம் முழுவதும் அப்பா மற்றும் மகனாக பலவிதங்களில் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு மிகப்பெரிய தூணாக நிற்கிறார்.


கதாநாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மாவுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதனால் அவர் வரும் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.


தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர் “ஆதிக் ரவிச்சந்திரன்”


குறிப்பாக G.V பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேறLeval . விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஜி.வியின் பின்னணி இசையும் முக்கிய காரணம். மேலும் பழைய பாடல்களை அருமையாக Remix செய்து திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து விட்டார் G.V.

0 comments:

Pageviews