இந்திய அரசியல்வாதியும், விலங்குநல ஆர்வலருமான திருமதி. மேனகா சஞ்சை காந்தி அவர்களின் பாராட்டுகளைப் பெற்ற “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம்

 

யுனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பாக திரு. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் தயாரித்து இயக்கி, வெங்கட்பிரபு, ஸ்னேகா, யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ஷாட் பூட் த்ரீ”. இத்திரைபடத்தின் சிறப்புக்காட்சிகள் சில முக்கிய பிரமுகர்களுக்குத் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. கடந்தவாரம் விலங்குகள் நல ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான திருமதி. மேனகா சஞ்சய் காந்தி அவர்களுக்குத் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த திருமதி. மேனகா சஞ்சை காந்தி அவர்களின் பாராட்டு, உலகெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


திருமதி. மேனகா சஞ்சைகாந்தி அவர்கள் படக்குழுவினருடன்

பகிர்ந்துகொண்டதாவது, “ஷாட் பூட் த்ரீ” ஒரு மிகச்சிறந்த  குழந்தைகளுக்கான திரைப்படம்.  இத்திரைப்படத்தைக் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். இத்திரைப்படம் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டால் எல்லைகளைக் கடந்து அனைத்து மொழி மக்களும் இத்திரைப்படத்தைக் கண்டுகளிக்கலாம். திரையரங்குகளுக்குப் பிறகு OTT தளங்களில் வெளிவரும் சமயம் இத்திரைப்படம் இன்னும் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் என்று உறுதியாக நம்புகின்றேன்.


“ஷாட் பூட் த்ரீ”


அனைத்து வயதினரின் இதயத்தையும் வருடும் ஒரு குடும்ப திரைப்படம் . விலங்குகள் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்ற செய்தியுடன், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கலவையாக இத்திரைப்படம் அமைந்திருப்பதால் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இத்திரைப்படம் ஒரு கட்டாயத் தேர்வாக அமையும். திருமதி. மேனகா சஞ்சை காந்தியிடமிருந்து கிடைத்திருக்கும் இவ்வரவேற்பு, இளம் பார்வையாளர்களிடம் இந்தப் படத்தை பெருமளவு கொண்டு செல்ல உதவும்.


திருமதி. மேனகா சஞ்சை காந்தியின் இவ்வகையான பாராட்டு, பரந்த வாடிக்கையாளர்களிடம் இத்திரைப்படத்தைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதன் அவர்களின் முயற்சிக்கு ஊக்கம் அளித்து உள்ளது. விலங்குகள் மீதான கருணையை பற்றி கூறும் இத்திரைப்படம், விலங்குகள்  நலனுக்காக தன்னை அற்பணித்திருக்கும் திருமதி. மேனகா சஞ்சை காந்தியுடன் ஒத்துப்போகின்றது என்றும் அவர் நம்புகின்றார்.


ஒரு நாயின் மீது அதீத பாசம்கொண்ட ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது “ஷாட் பூட் த்ரீ”.  கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், இது அனைவரின் இதயத்தையும் வருடி, அன்பு, பச்சாதாபம் மற்றும் விலங்குகள் பராமரிப்பின் முக்கியத்துவம் போன்ற அம்சங்களை எடுத்துகாட்டுவதால், அவற்றை எடுத்துக்கூறும் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.


படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அருணாச்சலம் வைத்யநாதன், திருமதி மேனகா சஞ்சை காந்தியின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர், ” திருமதி. மேனகா காந்தியிடமிருந்து இவ்வளவு உயர்ந்த பாராட்டுகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். விலங்குகள் நலனுக்காக தன்னை அற்பணித்துக்கொண்டவரின்  இந்தப் பாராட்டு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. முடிந்தவரை அனைத்து குழந்தைகளிடமும் இத்திரைப்படத்தைக் கொண்டு செல்ல அவரது வார்த்தைகள் எங்களை உற்சாகப்படுத்துகின்றது. மேலும் இந்தப்படம் ஒரு நல்ல மாற்றத்திற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் நம்புகிறோம். இறுதிவரை எங்களுக்கும் திரைப்படத்திற்கும் ஆதரவளித்ததற்காக, யூனிட் ஹெட், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், திருமதி ஹேமா கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இணை நிறுவனர் மற்றும் தலைவர், புளூ கிராஸ் ஆஃப் இந்தியா திரு.S. சின்னிகிருஷ்ணா ஆகியோருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றும் கூறினார்.


விரைவில் வெளியாக இருக்கும் "ஷாட் பூட் த்ரீ" திரைப்படம்  குடும்பங்கள் மற்றும் இளம் பார்வையாளர்களுக்கு மனதை வருடும் திரைப்படமாகவும், பொழுதுபோக்கு அம்சத்துடன் திரையரங்குகளில் கொண்டாடப்படும் விதமாகவும் அமைந்திருக்கின்றது. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ஆனந்த்ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் ஆகியோரின் கூட்டு முயற்சியில் மனதை ஈர்க்கும் திரைக்கதையாக இத்திரைப்படம் அமைந்து இருக்கின்றது. சினேகா, வெங்கட்பிரபு, யோகிபாபு ஆகியோருடன் சிவாங்கி, பூவையார், ப்ரணிதி, கைலாஷ் ஹீட் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு நொடியையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யாவின் மனதை மயக்கும் இசையும், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்ச்சிகளுக்கு ஆழம்சேர்க்கிறது. பரத்விக்ரமனின் படத்தொகுப்பு சீரானவேகத்தை கொடுக்கின்றது. தயாரிப்பு மேற்பார்வையாளர் முகில் சந்திரனின் அர்ப்பணிப்பும் முயற்சியும் திரைப்படத்தை உயிர்ப்பித்துள்ளது. நிர்வாக தயாரிப்பாளர் வெங்கடேஷ் சடகோபன் மற்றும் துணை தயாரிப்பாளர் அருண்ராம் கலைச்செல்வன் ஆகியோரது அசாதாரண பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றது.


0 comments:

Pageviews