கெழப்பய விமர்சனம்

 

கதிரேசகுமார் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தனது பணியை முடித்து மிதி சைக்களில் தனது வீட்டுக்கு செல்லும் குறுகிய ரோட்டின் நடுவில் சென்றுகொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு கார் வருகிறது. அந்த காரில் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும், டிரைவர் உட்பட நான்கு ஆண்களும் இருக்கிறார்கள். காருக்கு வழிவிடுமாறு கார் டிரைவர் ஹாரன் அடிக்கிறார். ஆனால் கதிரேசகுமார் வழிவிடாமல் நடுரோட்டில் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறார். காரில் இருந்தவர்கள் கோவமாகி கதிரேசகுமாரை என்ன செய்தார்கள் ? என்பதே மீதிக்கதை.


கதையின் நாயகன் கதிரேசகுமார் அமைதியான சிறந்த நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் சாரத்தை கச்சிதமாக சித்தரித்துள்ளார். கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார். இந்த வயதிலும் காட்டுப் பாதையில், கொளுத்தும் வெயிலில், அவர் எனர்ஜி குறையாமல் நடித்திருப்பது பாராட்டத் தக்கது. காரில் வருபவர்களும், ஒரு சாமானியன் வழி விடவில்லை என்றால் எப்படியெல்லாம் கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டுவார்களோ அதுபோல் வெளிப்படுத்தி, படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்கள். கிராம நிர்வாக அதிகாரியாக வரும் உறியடி ஆனந்தராஜ் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயல்பவராக தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இப்படத்தை மிக கவனமாக கையாண்டு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் யாழ் குணசேகரன் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவாளர் அஜித்குமார் போட்டிருக்கும் உழைப்புக்கு அவருக்கு கைகொடுக்கலாம். கெவியின் தனித்துவமான பின்னணி இசை படத்தை வித்தியாசமாக காட்ட உதவியிருக்கிறது.

0 comments:

Pageviews