பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தேவரா' படத்தில் இருந்து சைஃப் அலிகானின் 'பைரா' கதாபாத்திரத்தை ஜூனியர் என்டிஆர் வெளியிட்டுள்ளார்!
2024 ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவாரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் விதமாக, இப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து சைஃப் அலிகானின் கதாபாத்திரமான 'பைரா'வின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், சைஃப் அமைதியான நீர் மற்றும் மலைகளின் பின்னணியில் நிற்பதைக் காணலாம். இந்த எல்லா விஷயங்களும் நிச்சயம் ‘தேவரா’ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. படத்தில் இருந்து சைஃப் அலிகானின் தோற்றத்தைப் பகிர்ந்து, ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருப்பதாவது, ‘’பைரா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைஃப் சார்!’ என்று கூறியுள்ளார்.
நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. இப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் கலைத் தலைவராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இப்படம் தெலுங்கு திரையுலகில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment