ஜெயிலர் விமர்சனம்

 


படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் வசந்த் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார். அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள். இதனால் மனம் உடைந்த ரஜினி தன் மகன் நேர்மையாக இருந்ததனால் தான் இறந்துவிட்டதாக நினைத்து அந்த கும்பலை பழிவாங்க கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆனது? ரஜினி கிளம்புகிறார். மகனை கொலை செய்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்தாரா? பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை.


ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம் இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற கேரக்டர்கள் சந்தடி கேப்பில் ஸ்கோர் செய்து விடுகின்றனர். அதிலும் சிவராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகள், அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது. இப்படி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அனிருத் தான் படத்தை ஆக்கிரமித்து இருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய இசை அனல் பறக்கிறது. அதில் காவாலா, தலைவர் அலப்பறை ஒரு ரகமாகவும் ரத்தமாரே பாடல் ஒரு ரகமாகவும் ரசிக்க வைக்கிறது. இப்படி தலைவருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் ஒரு அசத்தல் கம்பேக் கொடுத்திருக்கிறார் நெல்சன். 


ஆக மொத்தம் இந்த ஜெயிலர் – ஜெயித்துவிட்டார்.


0 comments:

Pageviews