ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்றிருக்கும் 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜவான்' படத்திற்காக தயாராகுங்கள். ஷாருக்கான் இன்று 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரில் முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தப் போஸ்டரில் சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் இணைந்திருப்பதை  விவரிக்கிறது. மேலும் இந்த போஸ்டர் சில யூகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போஸ்டரில் முதன்முறையாக ஷாருக்கானுக்கும், விஜயசேதுபதிக்கும் இடையிலான காவியத்தனமான முகங்கள்... இடம் பிடித்திருப்பதால் அற்புதமாக இருக்கிறது.  


ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்தப் படத்தை சுற்றியுள்ள உற்சாகம்... உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. தினந்தோறும் கிங்கானின் மாயாஜாலத்தை வெள்ளி திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஜவான் படத்தின் ப்ரீ- வ்யூ ஏற்கனவே வெளியாகி நம் இதயங்களை கவர்ந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான 'வந்த எடம்..' அனைவரின் ப்ளே லிஸ்டில் தனது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை வலுப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர்கள் புதுப்புது ஐடியாக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்... ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மூலம் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. படத்தை திரையரங்குகளில் காண்பதற்கு இது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இந்த பிரம்மாண்டமான சினிமாத் திரையில் அனைவரையும் ஒன்றாக பார்க்கும் ஆவல்.. உச்சத்தில் உள்ளது. உத்வேகத்துடன் நாம் திரையரங்கை நோக்கி பயணிப்பதற்காக நமது கால்களையும் தயார்படுத்துகிறது. 


ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


0 comments:

Pageviews