மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார்

 

இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர்  திரு.விக்ரமன் அவர்களின் மகன் திரு.விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது.


இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்கள்  திரு.சூர்யகதிர்காக்கள்ளர் மற்றும் திரு.K.கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.


இத்திரைப்படத்தில் கௌதம்வாசுதேவ்மேனன், சமுத்திரகனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதிவெங்கட், ஐஸ்வர்யாதத்தா, பாலசரவணன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநக்‌ஷத்ரா, KGF புகழ் கருடா ராமசந்திரா மற்றும் அனுபமாகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

C.சத்யா இசையமைக்கிறார், ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்கிறார். மற்றும் கலை இயக்கம் அருண்.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டீசரை பார்த்துவிட்டு “சிறந்த ஆக்ஷன் படம்”  என்று மகிழ்ந்து பாராட்டினார். தயாரிப்பாளர் இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கும், ஹிட்லிஸ்ட் படக்குழுவினருக்கும் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.


அறிமுக ஹீரோ திரு.விஜய்கனிஷ்காவை பெரிதும் பாராட்டி, உங்கள் ஹிட் படங்களின் தொடக்கமாக, இந்த “ஹிட்லிஸ்ட்” திரைப்படம் இருக்கும் என்று வாழ்த்தினார்.


சிறந்த ஆக்சன், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த, குடும்பத்தினருடன் பார்க்க கூடிய திரைப்படமான இதன் போஸ்ட்புரோடக்சன் பணிகள் மும்முரமாக நடக்கிறது.  ஹிட்லிஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்க இருக்கிறார்கள்.

0 comments:

Pageviews