சான்றிதழ் விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து சிறந்த கிராமத்திற்கான விருது கிடைக்கிறது. அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை ஒருசில குழப்பங்களை உண்டாக்குகிறார். அதன் பிறகு அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்பதே மீதி படத்தின் கதை.
வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் நாயகன் ஹரிகுமார்,ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடியவர்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறார். அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவிக்கு அந்த வேடம் அல்வா சாப்பிடுவது போல. எளிதாகச் செய்திருக்கிறார். அருள்தாஸ், கெளசல்யா, ரவிமரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் ஆகியோரும் தத்தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அழகான கிராமம் கதைக்களம் என்றதும் உற்சாகமாக அதை வளைத்து வளைத்துப் படம் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன். பிஜிஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் குறைவில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனை பாராட்டலாம்.
0 comments:
Post a Comment