LGM விமர்சனம்

 

நாயகன் ஹரிஷ் கல்யானும் நாயகி இவானாவும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து இருவரும் தங்களுடைய பெற்றோர்களிடம் இதை சொல்கின்றனர். ஹரிஷ் கல்யானின் அம்மாவான நதியா இந்த கல்யாணத்திற்கு எந்த மறுப்புமின்றி  சம்மதிக்கிறார்.ஆனால் நாயகி இவானாவோ மாமியாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அந்த கல்யாண பேச்சு பாதிலேயே நின்று விடுகிறது. இந்த குழப்பத்தை சரி செய்ய ஹரிஷ் கல்யாண் குடும்பமும், இவானா குடும்பமும் சேர்ந்து ஒரு ட்ரிப் செல்கிறார்கள். அந்த ட்ரிப்பில் இவானா தன் வருங்கால மாமியாரான நதியாவை புரிந்து கொண்டாரா? இவர்களுடைய கல்யாணம் நடந்ததா? என்பதே மீதி கதை.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இன்றைய தலைமுறை நகரத்து இளம் பெண்களின் பயமாகவும், தயக்கமாகவும் இருக்கும் ஒரு பிரச்சனையை கையிலெடுத்து இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இசையும் ரமேஷ் தமிழ்மணியே செய்திருப்பதால் படத்திற்கு தேவையான அளவிற்கு அது அமைந்திருக்கிறது. குடும்பப்பாங்கான படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய சாக்ஷி, அதற்கு ஏற்ப ஒரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார்.  யோகி பாபுவின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மேலும் ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபுவும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.

மெலோடி ட்ராமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப்படம் பிடிக்கும்.

0 comments:

Pageviews