மாவீரன் விமர்சனம்

 

சென்னையில் காலங்காலமாக வசித்த பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்திவிட்டு மக்கள் மாளிகை என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகின்றனர்.  புதிய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மக்கள் தரம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் தினம் தினம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் நிலையில், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.  இந்த நிலையில் அப்பாவியாக, தைரியம் இல்லாத கலகலப்பாக இருக்கும் இளைஞனாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் திடீரென அந்த துறையின் அமைச்சர் மிஷ்கினிடம் தங்கள் பிரச்சனை குறித்து தைரியமாகப் பேசுகிறார். அப்பாவியாக கோழையாக இருந்த இவர் எப்படி மாவீரனாக மாறினார்? எப்படி அவருக்கு தைரியம் வந்தது? மக்களை அவர் காத்தாரா? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.


முதலில் கலகலப்பாக அறிமுகம் ஆகும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை போல நடித்துள்ளார். ஆக்சன் ஹீரோவாகவும் இந்த படத்தில் கவருகிறார். படம் முழுவதும் ஒரு வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பது போல் உள்ளது. இதனை அடுத்து மிஷ்கினின் அமைச்சர் கேரக்டர் ரசிக்க வைக்கிறது. மிஷ்கினிடம் இவ்வளவு வில்லத்தனமான நடிப்புத் திறமை இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு வீரத்தை கொடுத்து மாவீரனாக மாற்றும் அந்த விஜய்சேதுபதியின் குரல் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கதை மற்றும் திரைக்கதையை அழகாக எழுதி அதை திரையில் கொண்டுவந்துள்ளார் மடோன். பின்னணி இசை சூப்பர். யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. 


 இந்த மாவீரன் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய வீரன் தான்

0 comments:

Pageviews