Baba Black Sheep Movie Review

Casting : Suresh Chakravarthi, Abhirami, Vinodhini Vaidynathan, Rj Vigneshkanth, Ammu Abhirami, Bose Venkat, Harshath Khan, Adhirchi Arun, Subbu Panchu, Abdul Ayaz, Narendra Prasad, Madurai Muthu, Settai Sheriff, Ram Nishanth, Vishwanath Sharma, Kutty Vino

Directed By : Rajmohan Arumugam

Music By : Santhosh Dhayanidhi

Produced By : Romeo Pictures - Raahul

Suresh Chakravarthy in Salem is running two private schools. One is boy's school and another is coeducation school. After The money problems sons of Suresh Chakravarthy are joining the two schools due to the unexpected dies of his father.

இரு பள்ளிகளை ஒன்றாக்கியபின் 11ம் வகுப்பு மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இதற்கிடையே கடைசி பெஞ்ச் யாருக்கு என்பதிலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் ஒன்று சேர, அச்சமயத்தில், பள்ளி வளாகத்தில் தற்கொலை கடிதம் ஒன்று கையில் சிக்குகிறது. இறுதியில் அக்கடிதத்தை எழுதியது. யார்? / தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றினார்களா? இல்லையா? எனபதே ’பாபா பிளாக் ஷீப்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அப்துல் அயாஸ் இருவரும் பொருத்தமான கதாபாத்திரங்களாக படத்தில் தோன்றியிருக்கின்றனர். இருவரும் இருகோஷ்டிகளாக பிரிந்து கடைசி பெஞ்சிக்காக மோதிக்கொள்வது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. இவர்கள் கதாபாத்திரம் வ வலுவானதாக இல்லை.மாணவியாக வரும் அம்மு அபிராமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

அபிராமி சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். இவருடைய மகள் இறந்ததற்கான காரணத்தை படத்தில் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.தனியார் பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் மதுரை முத்து, போஸ் வெங்கட், வினோதினி ஆகியோர் நடிப்பு பெரிதாக சொல்லும்படி எதுவும் இல்லை.

ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ ஆகியோரை பள்ளி மாணவர்களாக சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பின்னணி இசை மிக சுமார் ரகமாகவும் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பள்ளி மாணவர்கள் கதை என்றாலே காதலை மையப்படுத்தும் கதைகள்தான் அதிகம் வந்திருக்கின்றன. நாள் இந்த் படத்தில் மாணவ மாணவிகளின் உளவியல் பிரச்னையை அழகாக பேசி அதற்க்கான தீர்வையும் சொல்லி இருக்கிறார். ராஜ்மோகன் ஆறுமுகம் மாணவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு தற்கொலை அல்ல என்ற விஷயத்தை சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

நடிகர்கள் : அபிராமி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், விஜே விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ


0 comments:

Pageviews