பீட்ஸா 3 விமர்சனம்
சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் நலன் (அஸ்வின்). அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் அங்கே தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் தயாரிக்கும் ( என்னடா குறளி வித்தையெல்லாம் காட்டுறீங்க) ஆராய்ச்சியாளராக இருக்கிறார் அவரின் காதலியாக நடித்துள்ள பவித்ரா மாரிமுத்து. போலீஸ் அதிகாரியாக வரும் நாயகியின் அண்ணன் (கௌரவ் நாராயணன்) இவர்களது காதலுக்கு எதிரியாக இருக்கிறார். இந்நிலையில் நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது. அது ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? என்பதைத் திகிலாக சொல்ல முற்பட்டு இருப்பதே 'பீட்ஸா 3 - தி மம்மி' படத்தின் கதை.
அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார். கோபம், காதல், சோகம் என நுண்ணிய உணர்வுகளை சரியாக கடத்தியுள்ளார். நாயகி பவித்ரா அஅருமையாக நடித்துள்ளார். ஹோட்டல் எம்ப்ளாயி ஆக வரும் காளி வெங்கட்,தனிக் கவன்ம் பெறுகிறார் அனுபமா குமார் மற்றும். இவரது மகளாக வரும் அபி நக்ஷத்ரவும் தனக்கு கொடுப்பட்ட கேரக்டருக்கு என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார்கள். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை திகிலாகவே செல்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாக உள்ளது. ஆனால், பேய் படங்களுக்கு உண்டான அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் மோகன் கோவிந்த்.
பிரபு ராகவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அருண்ராஜ் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் பீட்சா 3 படத்தை ஒருமுறை ரசித்துவிட்டு வரலாம்.
0 comments:
Post a Comment