வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் 'ப்ராஜெக்ட் கே' எனும் அற்புதமான அறிவியல் புனைவு கதை படைப்பு, 'கல்கி 2898 AD' என மாற்றம் பெற்றிருக்கிறது.

 

அறிவியல் புனைவு கதையின் வரிசையில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில் 'ப்ராஜெக்ட் கே' என்கிற 'கல்கி 2898 AD' எனும் பெயரில் பிரத்யேக காணொளி ஒன்றை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.


வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் 'கல்கி 2898 AD' என்ற அறிவியல் புனைவு கதையின், இதற்கு முன் எப்போதும் இல்லாத...புதிய தடம் பதிக்கும் வகையில்.. காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.



தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக 'கல்கி 2898 AD' என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்  பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா - ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் சொல்லிராத கதை சொல்லலில் இந்த திரைப்படம் தயாராகிறது. மேலும் இத்தகைய ஜானரில் அறிவியல் புனைவு கதை திரைப்படத்திற்கான எல்லையை விரிவாக்கம் செய்து புதிய வரையறையுடன் இப்படம் உருவாகிறது. 


'கல்கி 2898 AD' ன் பிரம்மாண்டமான வெளியீடு, சான் டியாகோ காமிக்-கானில் நடைபெற்றது. அங்கு திரைப்படத்தின் காட்சிகள் அதன் தொலைநோக்கு கருத்து மற்றும் மயக்கும் காட்சி அமைப்புகள் மூலம் வருகை தந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. படத்தின் புதிய தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை துல்லியமாக உள்ளடக்கிய காணொளி.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் உருவாக்கி இருக்கிறது. 


இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் 'கல்கி 2898 AD' இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறது.  2898 AD யின் தொலைதூரம்- எதிர்காலத்தில் அமைக்கப்பட்ட திரைப்படத்தின் முன்னோடி. எதிர்கால கூறுகளை வளமான கதை சொல்லலுடன் தடையின்றி விவரிக்கிறது. இதனால் ஈடு இணையற்ற மற்றும் அதிவேகமான சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. 


வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் தயாரித்திருக்கும் இந்த பிரம்மாண்டமான படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். 


'கல்கி 2898AD' ஐ பற்றிய சலசலப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் படத்தின் வெளியீடு மற்றும் புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கதை சொல்லும் பாணியை மறு வரையறை செய்து, அற்புதமான அறிவியல் புனைவு கதை மூலம் இந்திய சினிமாவின் திறனை உலக அரங்கில் வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் உலக அளவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Pageviews