20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.
பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பேட்ட, தர்பார் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி மாலை இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது. வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.
அது மட்டுமல்ல spotify-யில் இந்த பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது.
அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல், தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.
0 comments:
Post a Comment