பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சு வாரியார்
பரபரப்பான Mr.X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சுவாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான 'Mr.X ' படத்தில் மஞ்சுவாரியார் இணைந்துள்ளார்.
முதல் படத்திலேயே கோலிவுட்டை தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ்
S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது.
Mr X படம் பல்வேறு நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டண்ட் சில்வா.
இதற்காகவே நாயகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர்..
திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்கிறார் தன்வீர் மிர்.
படத்தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும், கலை இயக்கம் இந்துலால் கவீத்தும் ஆடை வடிவமைப்பை உத்தரா மேனனும் கவனிக்கின்றனர்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் AP. பால்பாண்டி. நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத்.
இப்படத்தின் இணை தயாரிப்பாளர் A.வெங்கடேஷ்.
Mr. X தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Mr.X -ன் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்
நடிகர்கள் - ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர்.
தொழிநுட்பக் கலைஞர்கள் விபரம்:
கதை & இயக்கம் - மனு ஆனந்த்
இசை - திபு நிணன் தாமஸ்
ஒளிப்பதிவு - தன்வீர் மிர்
படத்தொகுப்பு - பிரசன்னா GK
தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன்
சண்டைப் பயிற்சி - ஸ்டண்ட் சில்வா
கலை - இந்துலால் கவீத்
ஆடை வடிவமைப்பு - உத்தரா மேனன்
மக்கள் தொடர்பு - ஆ. ஜான்
கூடுதல் திரைக்கதை - திவ்யங்கா ஆனந்த் சங்கர் & ராம் H புத்ரன்
தயாரிப்பு மேற்பார்வையாளர் - A P பால் பாண்டி.
தயாரிப்பு நிர்வாகி - ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பாளர் - A.வெங்கடேஷ்
தயாரிப்பாளர் - S. லக்ஷ்மன் குமார்
தயாரிப்பு நிறுவனம் - பிரின்ஸ் பிக்சர்ஸ்
0 comments:
Post a Comment