Katharbasha Endra Muthuramalingam Movie Review

நடிகர்கள் : ஆர்யா, சித்தி இதானி , பிரபு, கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன்

இசை : ஜி.வி.பிரகாஷ்

இயக்கம் : முத்தையா

ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி , பிரபு, கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேணுகா, சிங்கம்புலி, தமிழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’

ராமநாதபுரம் மாவட்டம் நடுவக்குறிச்சியில் வசிக்கும் நாயகி சித்தி இதானி பெற்றோர்களை இழந்தவர் தன் அண்ணனின் 3 பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். நாயகி சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது உறவினர்கள் திட்டமிடுகிறார்கள் இதற்கு சம்மதிக்காத அவர், மதுரை சிறையிலிருக்கும் (ஆர்யாவை) சந்திக்கச் செல்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இதானியால் சந்திக்க முடியவில்லை. தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

இதையடுத்து சித்தி இதானிக்கு துணையாக நிற்கும் ஆர்யா, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இதனால் சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்க, வேறு ஒரு கும்பலும் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்கிறது. இறுதியில் ஆர்யாவை கொலை செய்ய வந்தவர் யார்? ஆர்யா நாயகி சித்தி இதானியை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் மீதிக்கதை.

கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தில் ஆர்யா வரம் கட்சியில் இருந்தது இறுதி காட்சிவரை படம் முழுவதும் சண்டை காட்சிகள்தான் அதிகம் உள்ளது. ஆர்யா சண்டை காட்சிகளுக்காகக் போட்டிருக்கும் உழைப்பு படத்தில் தெரிகிறது.

கிராமத்து பெண்ணாக வரும் நாயகி சித்தி அழகாக நடித்துள்ளார். படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார். ஆர்யாவுடன் கடத்தல், அன்னான் குழந்தைகள் மீது காட்டும் பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

ஜமாத் தலைவராக நடிகர் பிரபு நடித்திருக்கிறார். அவரின் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம். பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் கறி குழம்பு வாசம் பாடல் திரும்ப கேட்கும் ரகம், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளில் தெரிகிறது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாக்க நினைத்த இயக்குனர் முத்தையா இந்த படத்தை பெரியவர்கள் மட்டும் பார்க்க கூடிய அதிரடி சண்டை படமாக எடுத்திருக்கிறார். இரண்டாம் பாதி அளவிற்கு முதல் பாதியில் சண்டை காட்சிகளை குறைத்து கதையில் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்த்திருக்கும்.

மக்கள் தொடர்பு : சதீஷ் - சிவா ( AIM),

0 comments:

Pageviews