போர் தொழில் விமர்சனம்
அசோக்செல்வன் பயந்த சுபாவம் கொண்டவர். அவர் எதற்கும் பயப்படாத சரத்குமாரோடு கிரைம் ப்ரான்ச்-ல் பயணியாற்றுகிறார். இருவரும் ஒரு துருவமாகி திருச்சியில் நடைபெறும் தொடர்கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை எப்படி கண்டு புடிக்கிறார்கள் என்பதே போர்தொழில் படத்தின் மீதிக்கதை
ஒரு நல்ல கதைக்கு முதல் அடிப்படை அம்சம் அந்தக் கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது தான்..அந்த வகையில் மிகச்சிறப்பான நடிகர்களை கொண்டுள்ளது இப்படம். கதையின் நாயகர்களாக சரத்குமார் அசோக்செல்வன் கூட்டணி அபாரமாக நடித்துள்ளது. சிங்கிள் ஷாட்டில் கூட தன் கம்பீரமான பாடிலாங்குவேஜால் ஸ்கோர் செய்கிறார் சரத்குமார். அசோக்செல்வன் அடக்கி வாசிக்கும் இடங்களிலும் அடித்து ஆடும் இடங்களிலும் ஆசம்..நிகிலா விமல் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் கண்களில் பல்பு எரிவது கன்பார்ம். வில்லன்களாக வரும் இருவரும் கன கச்சிதமாக நடித்துள்ளனர்
இசையில் ஒரு தனி சாம்ராஜியத்தைச் செய்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். ஒரேயொரு பாடலும் கூட கனெக்ட் ஆகிறது. ஒளிப்பதிவில் தன் மொத்த உழைப்பையும் கொட்டியுள்ளார் கலைச்செல்வன் சிவாஜி. லைட்டிங் ப்ரேமிங் எல்லாமே படத்தின் மூட்-ஐ அழகாக செட் செய்துள்ளது.
துவங்கிய உடனே டாப் கியரில் பறக்கிறது படம். அந்த டெம்போ குறையாமல் பார்த்துக் கொண்டதற்குப் பின்னால் இருக்கிறது, ரைட்டர் ஆல்ப்ரெட் பிரகாஷ் & இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியின் ரைட்டிங் வொர்க். வசனங்களிலும் தனிக்கவனம் செலுத்தி உழைத்துள்ளனர். காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் எலிமெண்ட் வைத்ததிலும் அசத்தியுள்ளனர். முன்பாதியில் பயணித்த வேகம் பின்பாதியில் சற்று குறைவு என்றாலும் ஓவரால் படம் செம்ம இண்டெர்ஸ்டிங் என்பதில் மாற்றமில்லை.
போர்தொழில்- A Classy Crime Thriller. Must Watch.
0 comments:
Post a Comment