பானி பூரி விமர்சனம்

 

ஷார்ட்பிளிக்ஸ் (ஒடிடி) தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘பானி பூரி’. எட்டு பாகங்கள் எடுக்கபட்ட தொடர்.


சாம்பிகா சென்னையில் இருக்கும் ரோபோக்ட்டிஸ் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறார். கோவையில் இருக்கும் லிங்காவும் சாம்பிகாவும்  காதலர்கள். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு, திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் லிவிங் டு கெதர் ஸ்டைலில் தங்க முடிவு செய்து ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்ட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சாம்பிகா 7 நாட்களுக்குப் பிறகு லிங்காவை விட்டு பிரிந்தாரா? அல்லது அவரை மணந்தாரா? என்பது தான் ‘பானி பூரி’ தொடரின் கதை.


பல திரைப்படங்கள் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த லிங்கா, இந்த இணைய தொடரில் இயல்பாக நடித்து அசித்தியிருக்கிறார். ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஜம்பிகா தனது கதாபாத்திரத்தை மிக நன்றாகவே செய்திருக்கிறார்.


கேமராமேன் பிரவீன் பாலு,படத்தொகுப்பாளர் பி.கே, நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


பாலாஜி வேணுகோபால், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை என்பது இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல, பெற்றோர்களுக்கும் சம்மந்தம் இருக்கும் வாழ்க்கை என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

0 comments:

Pageviews