Kazhuvethi Moorkan Movie Review


Actors

அருள்நிதி தமிழரசு – ARULNITHI TAMILARASU
துஷாரா விஜயன்  - DUSHARA VIJAYAN
சந்தோஷ் பிரதாப் – SANTHOSH PRATHAP
சாயாதேவி யார் கண்ணன் – CHAYADEVI YAAR KANNAN
முனிஷ்காந்த் - MUNISHKANTH
ராஜசிம்மன் - RAJASIMMAN
சரத் லோகித்தாஷ்வா - SARATHLOKITHASHWA
யார் கண்ணன் – YAAR KANNAN
பத்மன் - PATHMAN
ஜக்குபாண்டி - JAKKUPANDI

Technicians

DIRECTOR - SY GOWTHAMA RAJ
DOP - SRIDHAR
MUSIC – D IMMAN
EDITOR – NAAGOORAN
ART DIRECTOR – MAHENDRAN PANDIAN
LYRICS – YUGA BHARATHI
STUNTS – K GANESH KUMAR
SONG CHOREOGRAPHER – DINA
SOUND MIXING – T UDAYA KUMAR
SOUND DESIGN – PREMNATH DFT
MAKEUP – MARIAPPAN
COSTUMES – MOHAMMED SUBEER
DI – LIXO PIXELS
COLORIST – RANGA
STILLS – ANBU
VFX – HOCUS POCUS, SANTHA KUMAR P
PRO – SURESH CHANDRA,  REKHA D’ONE’ & SATHISH (AIM)
DESIGNER – GIBSON UGA
PRODUCTION EXECUTIVES – RAMESH A, JAI & YSD SEKAR
EXECUTIVE PRODUCER – R BALAKMAR
CO PRODUCERS – SANJAY SHANMUGAM, PRABHU SHANMUGAM
PRODUCER – JAYANTHI AMBETHKUMAR

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் சை.கெளதம ராஜ் இயக்கத்தில்  அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சாயா தேவி, முனிஸ்காந்த், சரத் லோகித் சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன் ஆகியோர் நடிப்பில்  வெளியாகி இருக்கும் ’கழுவேத்தி மூர்க்கன்’ -

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள  தெக்குப்பட்டி கிராமத்தில் மேல்  சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதற்கிடையே சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக அருள்நிதி நிற்கிறார் சாதி வெறி மற்றும் பதவி வெறி பிடித்த அருள்நிதியின் தந்தை யார் கண்ணனுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் தன் மகன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்காமல் இருக்கிறது.

இந்த சூழலில், அந்த ஊரில் தன்னுடைய சாதி அரசியல் பலத்தை காண்பிக்க திட்டம் தீட்டுகிறார் அரசியல்வாதிகாக  வரும் ராஜசிம்மன். அப்போது ஏற்படும் பிரச்சனையில், ராஜசிம்மனின் பகைக்கு உள்ளாகிறார் சந்தோஷ். இந்த சூழலால் ராஜசிம்மனின் கட்சி பதவியும் பறிக்கப்படுகிறது.. இதனால், சூழ்ச்சி செய்து சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்கிறார். இந்தப்பழி அருள்நிதி மீது விழுகிறது.  இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்தவர்களை அருள்நிதி பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மீதிக்கதை.

மூர்க்கன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.எப்போதும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த  வகையில் காதல், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்த்திருக்கிறார். அதிலும், சண்டைக் காட்சிகளில் அதிரடியைக் கொடுத்திருக்கிறார். பூமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப்  பெயருக்கு ஏற்றவாறு அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

 கதாநாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன்  துணிச்சலான கதாபாத்திரத்தில்நடித்திருக்கிறார் அதுவும் அருள்நிதியிடம்  நக்கலான பேச்சும் காட்சிகள்  ரசிக்க வைக்கிறது.  மற்றொரு நாயகியாக வரும் சாயா தேவி,சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதை வலுவானதாக தனது நடிப்பில் மாற்றி இருக்கிறார்.

யார் கண்ணன், ராஜசிம்மன் இருவரும் வழக்கமான வில்லன்களாக வந்து செல்கிறார்கள். முனிஷ்காந்த் வரும் காட்சிகளில் சிரிக்கவும்  சிந்திக்கவும்  வைக்கிறது. சரத் லோகித்சவா, பத்மன்,  என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்  டி.இமான் இசையில் பாடல்கள்  கேட்கும் ம் ரகம் . பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.  கிராமத்து சாலைகளில் கார்களும் பைக்கும் துரத்தும் சேசிங் காட்சியை அற்புதமாகப் படமாக்கிஇருக்கிறார்  ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர்,

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் எதிர்பாராத சுவராசியமான திருப்பங்கள் இருப்பதால்,ரசிக்க முடிகிறது. படத்தில் சில இடங்களில் வசனங்கள் கவனம் கவர்கின்றன. நண்பனின் மரணத்திற்கு பழி வாங்கும் கதை  என்று ஏற்கனவே நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதில் இருந்தது முற்றிலும் மாறுபட்ட விதத்தில்   இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் கௌதம் ராஜிக்கு பாராட்டுக்கள். சொல்ல வைத்த கதையை அழகாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் கழுவேத்தி மூர்க்கன்’ தோழனுக்கு தோள் கொடுப்பவன்

நடிகர்கள் : அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சாயா தேவி, முனிஸ்காந்த், சரத் லோகித் சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன்

0 comments:

Pageviews