‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’


 ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 


மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்டுமொத்த குழுவும் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். இப்படம் ஜூன் 2, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். 


முதல் சிங்கிள் 'தண்டர்காரன்' ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என வலுவான ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தில் அவரது இருப்பும், ஏ.ஆர்.கே.சரவனின் புதுமையான கதைசொல்லலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.


படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி,

ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,

படத்தொகுப்பு: ஜி.கே. பிரசன்னா, 

கலை: என்கே ராகுல், சண்டைப் பயிற்சி: மகேஷ் மேத்யூ, 

பப்ளிசிட்டி டிசைனர்: ட்யூனி ஜான்,

ஸ்டில்ஸ்: அமீர், 

ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன், 

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.


சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது

0 comments:

Pageviews