ஏலியன்ஸ் 2042 மே 26 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

 

`CURTAIN RAISER (கர்டெய்ன் ரைசர்)` - James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) (அவதார் இயக்குநர்), ALIENS (1986) ஏலியன்ஸ் (1986) சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது! இதுவரை பல தொடர்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986)  (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது! வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த சமீபத்திய படம், ஏலியன்ஸ் 2042 மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில், 6 மொழிகளில் வெளியாகிறது. 2042-ம் ஆண்டு எதிர்காலத்தில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது!


`சுருக்கம்` - தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில்,

ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தின் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுபடுகிறார்கள்! மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது! தப்பிப்பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது. வேற்றுகிரகவாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது!


CREDITS 


Cast- Ren Tianye, Zhang Zhilu, Qu Niciren etc 

Cinematography- Qiu HangXu ; 

Action Director - Shi Zhanbiaa 

Visual Effect Director - Du Keyan 

Director - Huang Zhuasheng


777 பிக்சர்ஸ் மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி என 6 மொழிகளில் வெளியிடப்படுகிறது

0 comments:

Pageviews