வலுவான காட்சிகளுடன் வெளியாகியுள்ள நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் 'மைதான்' படத்தின் டீசர்

 

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது


இன்றைய தேதி வரை, நடிகர் அஜய் தேவ்கனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'மைதான்' இருக்கிறது. உலக அளவில் பலராலும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்தில்  60 ஆண்டுகளுக்குப் பிறகும்,  இன்னும் யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரலாற்றையும், சாதனைகளையும்  இந்தியாவுக்குக் கொடுத்த ஒரு அறியப்படாத கதாநாயகனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. 


இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.


அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


0 comments:

Pageviews