கண்ணை நம்பாதே விமர்சனம்

 

வாடகைக்கு வீடு தேடுகிறார்கள் உதயநிதியும் அவரது நண்பரும். பல இடங்களில் அலைந்தும் வீடு கிடைக்கவில்லை. உதயநிதிக்கு வீடு தேவை என்பதால் இன்னொரு நபர் இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து ஒரு வீட்டில் குடியேற சம்மதிக்கிறார். அந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா வசித்து வருகிறார். இரவில் சரக்கடிக்கலாமா என பிரசன்னா கேட்க அதற்கு உதயநிதி தனக்கு பழக்கமில்லை என்று கூறவே, சதீஷ், பிரசன்னா இருவரும் மது அருந்த செல்கின்றனர். உதயநிதியும் அவர்களுடன் செல்கிறார்.


அந்த சமயத்தில் வேகமாக வந்த கார் நிலைதடுமாறி மோதி நிற்க, அந்த காரை ஓட்டி வந்தது ஒரு பெண் எனவும் அவரால் மேற்கொண்டு காரை ஓட்டிச் செல்ல என்பதையும் உதயநிதி பார்க்கிறார். இதனால் அவரே அந்த பெண்ணை நேராக வீட்டில் கொண்டு விட முடிவு செய்கிறார். இருவரும் அந்த வீட்டுக்கு செல்கின்றனர்.


ரொம்ப நேரமும் ஆனதால், அவரால் அங்கிருந்து எப்படி தன் வீட்டுக்குச் செல்ல முடியும் என தயங்கி நிற்க, அந்த பெண்ணே உதயநிதியை தன் காரை எடுத்துச் செல்லுமாறும் திரும்பி வந்து தாருங்கள் எனவும் கூற உதயநிதி காரை எடுத்துச் செல்கிறார்.


மறுநாள் விடிகிறது, காரை உரிமையாளரிடம் கொடுக்க செல்லும்போது தான் தெரியவருகிறது காரின் உரிமையாளரான அந்த பெண் பிணமாக அதே காரின் டிக்கியில் இருக்கிறார் என்பது. இந்த இடத்தில் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இந்த இரவில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை!


உதயநிதி, பிரசன்னா, பூமிகா, நாயகி ஆத்மிகா உள்ளிட்டோரின் நடிப்பு பிரமாதம். உதயநிதியின் கதாபாத்திரம் படத்தை நமக்கு சுவாரஸ்யமாக கொண்ட செல்ல உதவியிருக்கிறது. கதாநாயகன் என்று இல்லாமல் கதைதான் நாயகன் எனும் அளவுக்கு இந்த படம் இருக்கிறது. வழக்கமான திரில்லர் படம் போல இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. இயக்குநருக்கு முதல் பாராட்டுக்கள் அந்தந்த கதாபாத்திரத்துக்கு இந்தந்த நடிகர்களைத் தேர்வு செய்ததுதான். அதிலும் பிரசன்னா பின்னி பெடலெடுக்கிறார். பூமிகா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களை விட உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு அருமை.

0 comments:

Pageviews