பல்லு படாம பாத்துக்க விமர்சனம்

 

வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு வருவதை போல கதை தொடங்குகிறது. இப்படி தற்கொலை செய்து கொள்ள வரும் அவர்களை ஜாமிகள் துரத்துகின்றன. அந்த ஜம்பிகளிடம் இருந்து தப்பித்தனரா? தற்கொலை முடிவை கைவிட்டனரா? என்பதுதான் மீது கதை தற்கொலை செய்து கொண்டால் ஒரே அடியாக போய்விடலாம் ஆனால் ஜாம்பி கடித்தால் ஜாம்பியாக மாறிவிட வேண்டியதுதான் என்ற அடிப்படியில் தான் படத்தின் தலைப்பே இருந்தது.


இந்த படம் மற்ற ஹாரர் மற்றும் ஜாம்பி படங்களை போல இல்லாமல் இளைஞர்களுக்கான படமாக இருக்கிறது. குடும்பத்துடன் சென்றால் உங்களுத்தான் சங்கடம். படத்தில் நீளம் 2 மணிநேரம் மட்டுமே இருப்பதால் இந்த படம் தப்பித்து விட்டது. டிஸ்கவரி சேனல், விளம்பங்கள், திரைப்படங்கள் என அனைத்தையும் வைத்து 18+ காமெடி செய்து கலாய்த்திருக்கின்றனர். அதே போல அரசியல் தலைவர்கள் சார்ந்த காமெடியிலும் இடம்பெற்றுள்ளன. அனால் இவை எப்படியோ சென்சார் போர்டில் தப்பித்து விட்டது.


இப்படம் எடுக்க முதலில் திட்டமிட்டது 2018ல் ஆனால் படம் வெளியாகி இருப்பது 5 வருடங்கள் கழித்து 2023ல் எனவே சில இடங்களில் 5 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்று அப்படியே தெரிந்தது. அதே போல காமெடியிலும் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் ஹிட்லர் கதாபாத்திரம் ஓன்று வரும். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் படத்திற்கு ஒத்துபோகவில்லை படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ரசிக்கும் படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏமாற்றமே.


18+ படம் என்று கூறினாலும் படத்தில் அந்த அளவிற்கு ஆபாச காட்சிகள் இல்லை. இளைஞர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் படி எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜன். அதே போல இளைஞர்களை மனதில் வைத்துதான் படத்தின் வசனம், திரைக்கதை இரண்டுமே அமைந்திருக்கிறது.


மொத்தத்தில் குடும்பமாக இல்லாமல் நண்பர்களுடன் சென்று ஜாலியாக பார்க்கும் படமாக இருக்கிறது “பல்லு படாம பாத்துக்க” படம்

0 comments:

Pageviews