ஷூட் தி குருவி குறும்பட விமர்சனம்


 


நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார். காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். தன் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் குருவிராஜனை தாக்கி விடுகிறார் . காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இப்படி ஒரு கேங்ஸ்டர் கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் குறும்படம் தான் ஷூட் த குருவி.


தாதாவாக நடித்திருக்கும் அர்ஜைக்கு இந்தப்படம் நல்லபெயரைப் பெற்றுத்தரும் என்பதில் மாற்றமில்லை. அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். காமெடி கதாபத்திரத்தில் வழக்கம் போல் நம்மை சிரிக்கவைத்திருக்கிறார் ஷா ரா. விஜே ஆஷிக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் தன்னை நிலைநாட்டியுள்ளார். காமெடி கதை, மிகுந்த பொருட்செலவு, ஒரு சில பாத்திரங்கள் அளவான வசனங்கள், கிளைமாக்சில் வரும் ட்விஸ்ட் என அனைத்தையும் பக்குவமாக கையாண்டு வெற்றியடைந்துள்ளார் இயக்குனர் மதிவாணன்.


இந்த ஷூட் தி குருவி குறும்படம்  ShortFlix OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.


0 comments:

Pageviews