நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ்-ஷேன் நிகம்- நீரஜ் மாதவ் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்.6

 

பான் இந்திய அளவில் கொண்டாடப்பட்ட, டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘மின்னல் முரளி’    திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீண்டும் ஒரு உயர்-ஆக்டேன் ஆக்ஷன் என்டர்டெய்னருடன் திரும்பியுள்ளனர். இந்தப் படம் மூலம் நஹாஸ் ஹிதாயத் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம் ஆகியோர் டைட்டில் கேரக்டர்களிலும், நீரஜ் மாதவ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். 


வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் சோஃபி பால் மூலம் தயாரிக்கப்பட்டு, பிரம்மாண்டமான ஆக்‌ஷன் பிளாக்ஸ் மற்றும் 100% பொழுதுபோக்குடன் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 


ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களான ‘தி கே.ஜி.எஃப்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுத்து ரசிக்க வைத்த ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இந்த படத்திற்கும் சண்டை பயிற்சிக் கொடுத்துள்ளனர். 


தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை ஆகஸ்ட் 2023ல் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்

0 comments:

Pageviews