ஆக்ஸிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ மார்ச் 10 முதல் சோனி லிவ்வில் ஒளிபரப்பாகிறது

 



ஆக்ஸிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ என்பது செல்லா என்ற வேலையில்லாத ஒருவரின் கதையாகும். அவர் தனது முன்னோர்களிடமிருந்து பெற்ற ஒரு துண்டு நிலத்தை வைத்துள்ளார். விவசாயம் செய்வதில் இருந்து எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் அவர் ஒருநாள், தவறுதலாக தனது நிலத்தில் தீப்பிடித்ததால் அவருடைய மொத்தப் பார்வையும் மாறியது. நிலத்தைக் காப்பாற்றும் முயற்சியில், செல்லா தனது நட்பு, விவசாயம் மற்றும் காதலில் ஏமாற்று வித்தயை கையாள்கிறார். இந்த செயல்முறையில் செல்லா சிக்கலை எதிர்கொள்வாரா அல்லது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டாரா? இது அனைத்திற்கும் இந்த நிகழ்ச்சி விடையளிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கதை சொல்லல் முறை இசை மூலமாக சொல்லப்பட்டுள்ளது. இது பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அந்த கதாபாத்திரங்களோடு தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. 


கிரியேட்டிவ் தயாரிப்பாளர் பாலாஜி மோகன் மற்றும் டிரெண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் ராஜா ராமமூர்த்தி தயாரித்துள்ளார். சுகன் ஜெய் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் சஞ்சய் சுபாஷ்சந்திரன் மற்றும் வித்யா சுகுமாரன் இணைந்து தயாரித்த இந்த நிகழ்ச்சியில் வைபவ், ரம்யா பாண்டியன், படவா கோபி, வினோதினி வைத்யநாதன், சுட்டி அரவிந்த் மற்றும் கல்லோரி வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த நிகழ்ச்சி மார்ச் 10 முதல் சோனி லிவ்வில் மட்டுமே ஒளிபரப்பாகிறது

0 comments:

Pageviews