ஓம் வெள்ளிமலை விமர்சனம்

 

வெள்ளிமலை என்ற மலை கிராம மக்கள், அந்த ஊரில் இருக்கும் நாட்டு வைத்தியர் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க மறுப்பதோடு, அவரது மருந்தை கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் சகித்துக்கொள்ளும் சுப்பிரமணி என்றாவது ஒரு நாள் மக்கள் தனது  வைத்தியத்தின் மதிப்பை புரிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஊரில் தனது வைத்தியத்தை தொடர்கிறார். இதற்கிடையே அந்த கிராம மக்கள் விநோத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் சுப்பிரமணியிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துவிடுகிறார். இதனால், ஒட்டு மொத்த கிராம மக்களும் தங்களை காப்பாற்றுமாறு வைத்தியர் சுப்பிரமணியிடம் தஞ்சம் அடைய, அவரோ தன்னிடம் நோய்க்கான மருந்து இல்லை என்று சொல்வதோடு, மருந்து தயாரிக்கும் மூலிகையை தேடி மலை உச்சிக்கு மக்களை அழைத்து செல்கிறார்.  அங்கு சென்றவுடன், மருந்து தயாரிக்கும் மூலிகை எது என்பது தனக்கு தெரியாது என்றும், நோயால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தியது தான் இல்லை என்று சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகிறார் . அவர், ஏன் அப்படி சொன்னார்?, நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.


சூப்பர்குட் சுப்பிரமணி, தனது இயல்பான நடிப்பின் மூலம் சித்த மருத்துவர் கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளார். கிண்டல், கேலி, சோகம், எமோஷன் என பலவித உணர்ச்சிகளை பக்குவமாக வெளிப்படுத்தி சபாஷ் பெறுகிறார். அறிமுக நடிகர் வீரசுபாஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார். அறிமுக நடிகை அஞ்சு கிருஷ்ணா, வசன உச்சரிப்பு, நடிப்பு, உடல் மொழி, தோற்றம் என்று அனைத்திலும் அச்சு அசலான மலை கிராமப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் காடுகளையும்,  மலைகளையும், அவற்றினூடே இருக்கும் பழமை மாறாத கிராமத்தையும், கிராம மக்களையும் யதார்த்தமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்.


என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

0 comments:

Pageviews