தலைக்கூத்தல் விமர்சனம்

 

செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சமுத்திரக்கனி மனைவி வசுந்தரா . இவர்களுக்கு ஒரு மகள். சமுத்திரக்கனியின் தந்தை உடல்நலமமின்றி படுத்தபடுக்கையாகி விடுகிறார். குடும்ப பாரம் ஒருபக்கம் இருந்தாலும் தந்தை மீதான பாசம் குறையாத சமுத்திரக் கனி அவருக்கு பணிவிடை செய்வதுடன் சிகிச்சைக்கு வீட்டை அடமானம் வைத்து செலவு செய்கிறார. பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் கடன்

கொடுத்தவர் வீட்டை விற்க முயல்கிறார். இது தெரிந்ததும் சமுத்திரக் கனியிடம் சண்டை போடும் வசுந்தரா அவரை பிரிந்து செல்கி றார். அவரிடம் சமானதானம் பேச வரும் வசுந்தரா குடும்பத்தினர், உயிருக்கு போராடும் அவரது தந்தையை தலைக்கூத்தல் முறையில் கொல்லச் சொல்கின்றனர். அதற்கு சமுத்திரக்கனி சம்மதிக்க மறுக்கிறார் ஒரு கட்டத்தில் எப்படி யாவது செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து செல்கி றார். அதன் பிறகு நடந்தது என்ன என்ப தற்கு உருக்கமாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.


இது வழக்கமான ஒரு படம் என்பதைவிட கிராமத்து பக்கம் இன்றளவிலும் நடக்கும் ஒரு கருணை கொலை என்றுதான் சொல்ல வேண்டும் . கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசுக்களை கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்படியொரு கொடுமைதான் தலைக்கூத்தல் முறையில் நடக்கும் கொலைகளும். இதை தடுக்க சட்டம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.


இப்படியொரு சம்பவத்தை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனி இருவரும் ஒரு அக்கிரமத்தை தோலுரித்திருக்கின்றனர்.

சமுத்ரக்கனியின் தந்தைக்கு தலைக் கூத்தல் நடத்தி அவரது மூச்சை நிறுத்த மனைவி வசுந்தராவும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தும் போது அதுவும் ஒரு உசிரு தானே என்று சமுத்திரக்கனி சொல்லும் போது நெஞ்சு கனக்கிறது.


வசுந்தரா இயல்பான ஒரு சராசரி குடும்ப பெண்ணாக நடித்திருக் கிறார். தந்தைக்கு தலைக்கூத்தல் நடத்தும்படி சமுத்திரக் கனியிடம் அவர் உறவினர்களை அழைத்து வந்து வற்புறுத்தும்போது கோபப்பட வைக்கிறார்.


படுத்துக்கொண்டே மூச்சை அடக்கி நடித்தி ருக்கும் கலைச்செல்வன் சினிமா மீது வைத்தி ருக்கும் ஆர்வத்துக்காக எதையும் செய்வேன் என்பதுபோல் வாழ்ந்தி ருக்கிறார். சாமியார் வேடத்தில் வரும் வையாபுரி தனது நடிப்பால் ஆச்சரிப்பட வைக்கிறார்.

இளவயது சமுத்திரக் கனிக்கு தந்தையாக நடித்திருக்கும் கதிர் அவரைவிட வயதில் மிகவும் குறைந்தவர் ஆனாலும் ஒப்புக் கொள்ளும்படி நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார்.


இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன் பாடல்களை மனதில் பதிய வைப்பதுபோல் அந்த பெரியவரின் உயிர் மூச்சின் வலியையும் புரிய வைத்திருக்கிறார்.

அப்பட்டமான கிராமத்து மண்ணை படம் முழுவதும் பரவச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் டான் ராஜ்.

வயதானவர்களை கருணைக்கொலை செய்யும் தலைக்கூத்தல் முறை இன்றும் தமிழகத்தில் சில கிராமத்தில் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுபவதை மையப்படுத்தி முதியவர்களை கொல்லும் சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லி, அதில் கொஞ்சம்  காதல் நினைவுகள், குடும்ப சென்டிமெண்ட் கலந்து செயற்கை மரணத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.


0 comments:

Pageviews