வசந்தமுல்லை திரை விமர்சனம்

 

ஐடி ஊழியரான ருத்ரன் (பாபி சிம்ஹா) முக்கிய பணியை குறிப்பிட்ட நாளில் செய்து முடித்தால் சம்பளம் உயரும் என்பதால் அதை ஒப்புக்கொண்டு இரவு பகல் பாராமல் கணினியில் வேலை பார்க்கிறார். மனைவியிடம் கூட நேரத்தை ஒதுக்க முடியாமல் ஒடிக்கொண்டே இருக்கிறார்.  ஒரு நாள் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்ல  அங்கே மயக்கமடைகிறார், பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் அவருக்கு தூக்கமின்மையின் விளைவாக இருட்டடிப்பு அதாவது பிளாக்அவுட் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வெடுக்கச் சொல்கிறார். ருத்ரனின் உடல் நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். மலைப்பகுதிக்கு சென்று சுற்றுலா முடித்து வரும் வழியில் வசந்த முல்லை என்ற பழைய விடுதியில் தங்குகிறார்கள். அப்போது நிலாவுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட மருந்து வாங்க ருத்ரன் காரை எடுத்து செல்கிறான். மீண்டும் மருந்து வாங்கி விடுதிஅறைக்கு வரும் போது நிலா காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத மனைவி ஒருபுறம் ஒரு மர்ம மனிதன் வில்லை வைத்துக் கொண்டு கொல்ல மறுபுறம் துரத்த உயிருக்கு பயந்து ஒடுகிறான் ருத்ரன். அதன் பின் சில விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன.  இறுதியில் காணாமல் போகும் நிலா என்ன ஆனாள்? ருத்ரன் நிலாவை மீட்டாரா? மர்ம மனிதன் யார்? இவர்களை கொல்ல வரும் காரணம் என்ன? இவையெல்லாம் நடப்பது எதனால்? என்பதே படத்தின் மீதி கதை.


ருத்ரனாக பாபி சிம்ஹா வேலை பளு காரணமாக உறக்கமின்றி தவித்து பாதிப்புக்குள்ளாகும் கதாபாத்திரத்தில் எரிச்சல், கோபம், இயலாமை ஆகியவற்றை வெளிக்காட்டி மனைவியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் தவிக்கும் தவிப்பு என்று இயல்பாக நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.


காஷ்மீரா பரதேசி அழகு பதுமை, இளமையுடன் கவர்ச்சியாகவும் பாபி சிம்ஹாபிடம் நெருக்கம் காட்டி மனைவியாக நடிப்பிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார். மர்ம மனிதனாக ஆர்யா சிறப்பு தோற்றத்திலும்,விடுதியின் வரவேற்பரை ஊழியராக கொச்சு பிரேமன், மருத்துவராக சரத்பாபு மற்றும் மற்றும் ரமா பிரபா, தீபக்பரமேஸ், மோகன், கீரீஸ் நாயர், மோனா துணை கதாபாத்திரங்கள் பயமுறுத்தலை சரியாக செய்துள்ளனர்.


விவேகா, விவேக், கார்த்திக் நேத்தா ஆகியோரின் பாடல்களும் ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.


கோபி அமர்நாத் ஒளிப்பதிவு த்ரில்லர் கதைக்கான அத்தனை அம்சங்களையும் கொடுத்து காட்சிக்கோணங்களில் மிரட்டி உள்ளார்.


மொத்தத்தில் சந்தமுல்லை திடுக்கிடும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் 

0 comments:

Pageviews