ஓம் வெள்ளிமலை இசை வெளியீடு
தமிழ் நாட்டில் 'நாட்டு மருத்துவம்' பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு உயிர்களை இந்த நாட்டு மற்றும் சித்த மருந்துகள் காப்பாற்றி உள்ளன இருப்பினும் நாட்டு மருத்துவதிற்கு சரியான மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதற்காக கவலைப்பட்ட இயக்குனர் ஓம் விஜய், இதற்கு தீர்வு சொல்லும் விதமாகவும், நாட்டு மருத்துவத்தின் மகத்துவத்தை தமிழ் மக்களிடம் எடுத்து கூறவும் 'ஓம் வெள்ளிமலை' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
'முண்டாசுப்பட்டி','பிசாசு', 'ஜெய் பீம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி என்பவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். 'ஜெய் பீம்' படத்தில் போலீஸ்காரராக நடித்த சுப்பிரமணி அவர்களின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சூப்பர் குட் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் சுப்பிரமணி. 'வெள்ளிமலை' படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் ஜி. வி. பிரகாஷ் பாடல்கள் பாடி உள்ளார்கள்.
இப்படத்தின் இசை வெளியீடு சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இசைத்தட்டை லியோனி வெளியிட சீமான் மற்றும் விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர் .
லியோனி பேசும் போது, "ஒரு காலத்தில் சினிமா பாடல்கள் பலவற்றை நான் கேலி செய்துள்ளேன். இன்று நானே பாடல்கள் பாடுகிறேன் என்று கூறி தியாகராஜ பாகவதர், சிவாஜி போல் நடித்து காட்டினார்.
சீமான் பேசும் போது "இன்று மக்கள் மீண்டும் இயற்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். அதிக அளவில் நடக்கும் செக்கு எண்ணெய் வியாபாரமே இதற்கு சாட்சி. இயற்கையை போற்றும் 'வெள்ளிமலை' போன்ற படங்கள் வருவதே நாம் விழிப்புணர்வு பெற்று வருகிறோம் என்று அர்த்தம்." என்றார்.
பெரும் பாலும் மலைப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நமது கலாசார வேர்களை தேடும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.
0 comments:
Post a Comment