“ZEE5 அடுத்ததாக மீண்டும் ஒரு கிராமப்புற ஆக்சன் எண்டர்டெயினர் படமான “காரி” திரைப்படத்தை வெளியிடுகிறது. ““சசிகுமார் நடிப்பில் கிராமப்புற ஆக்சன் எண்டர்டெயினர் டிசம்பர் 23 முதல்”~
சென்னை, டிசம்பர் 19, 2022: இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி இயங்குதளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 இன்று தமிழ் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான “காரி” திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள “காரி” திரைப்படத்தை, இயக்குநர் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ளார். சென்னையில் ஒரு குதிரை ஜாக்கியின் வாழ்க்கையை விதி எப்படி ராமநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது, விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை சுற்றி நடக்க கூடிய விசயங்களை பற்றி இப்படம் பேசுகிறது. காரி படத்தில் M. சசிகுமார், பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகிநீடு, ராம்குமார் கணேசன், சம்யுக்தா, பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒரு சாம்பியன் ரேஸ் ஜாக்கி, மல்டி மில்லியனர் மற்றும் ஒரு எளிய கிராமத்து பெண், இந்த மூன்று கதாபாத்திரங்களும் காரையூரில் உள்ள கிராமப்புற கிராமவாசிகளும் இந்த கதையின் மையம். பல மைல்களுக்கு அப்பால் , தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழும் இவர்களை விதி ஒரு பிரச்சனையில் ஒன்றாக இணைக்கிறது. சசிகுமார் சென்னையில் வாழும் சேது எனும் குதிரை ஜாக்கியாக நடித்திருக்கிறார். அவரது தந்தை - வெள்ளசாமி (ஆடுகளம் நரேன்) இறந்த பிறகு அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்திற்கு உள்ளாகிறது, ஒரு கட்டத்தில் அவரது செல்ல குதிரையும் கொல்லப்படுகிறது. எதிரிகளான எஸ்.கே.ஆர் (ஜே.டி. சக்ரவர்த்தி), இறைச்சி வியாபாரம் மற்றும் விலங்குகளைச் சுரண்டுவதில் ஈடுபட்டிருக்கும் ஒரு பிஸினஸ்மேன். இவர்கள் மோதிக்கொள்வது ஏன் என்பதே படம். கிராமப்புற மண்சார்ந்த வாழ்வியல், விலங்குகளின் விடுதலை, பெருநிறுவனங்களின் பேராசை, இறைச்சி நுகர்வு நெறிமுறைகள் மற்றும் இதுவரை திரையில் பேசியிராத பல விஷயங்களளை இப்படம் அழுத்தமாக பேசுகிறது.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., "ZEE5 தளத்தில், பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதும் மேலும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அவர்களின் மண் சார்ந்த கதைகளை வழங்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். கிராமப்புற கதையில் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான யானைக்குப் பிறகு, எங்களின் அடுத்த விருந்தாக காரி திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆக்ஷன் த்ரில்லர் கலந்த கிராமிய கதை, கண்டிப்பாக அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும்.
தயாரிப்பாளர் லஷ்மன்குமார் கூறுகையில்..
“அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அருமையான படைப்பு இது. மனித உணர்வுகள், வலி, காதல், துரோகம் மற்றும் தியாகம் அனைத்தும் இருக்கும் இந்த கதை, ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் வகையிலான திரைக்கதையுடன் அற்புதமான ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. உங்களுக்குப் பிடித்தமான நட்சத்திர நடிகர்களின் கூட்டணியுடன், காரியில் நேரடியான ஜல்லிக்கட்டு, கார்ப்பரேட் பேராசை மற்றும் விலங்குகள் மீது எங்களின் தீராத அன்பு ஆகியவையும் நிரம்பியுள்ளன. இப்படம் விரைவில் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.
~ZEE5 இல் பிரத்தியேகமாக டிசம்பர் 23 முதல் காரியை பாருங்கள்~
ZEE5 பற்றி:
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
0 comments:
Post a Comment