டிரைவர் ஜமுனா விமர்சனம்

 

வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். தந்தையை இழந்து நோயாளியான அம்மாவுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்பத்தின் மூத்த வாரிசான ஐஸ்வர்யா ராஜேஷ், மறைந்த தந்தை செய்த தொழிலை , அவரைத் தொடர்ந்து இவர் மேற்கொள்கிறார். ஒருமுறை இவருடைய வாகனத்தில் அரசியல்வாதி ஒருவரை கொல்லும் நோக்கத்தில் கூலிப்படை ஒன்று பயணிக்கிறது. அவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? அவர்கள் கொல்ல நினைத்த அரசியல்வாதியை கொன்றார்களா?  என்ன நடந்தது? என்பதே படத்தின் விறுவிறு திரைக்கதை.


முதல் பாதி மெதுவான திரைக்கதையுடன் நகர இரண்டாம் பாதியில் சற்று விறுவிறுப்பு அதிகரிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத திருப்பமாக அமைகிறது. 


சாரதியான ஐஸ்வர்யா ராஜேசின் தந்தை, தேர்தல் அரசியலில் ஈடுபட, அதை விரும்பாத வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தும் மூத்த அரசியல்வாதி ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையை கொன்றுவிடுகிறார். இதற்காக அவரும், அவரது இளைய சகோதரரும் திட்டமிட்டு, கூலிப்படையில் இணைந்து, அந்த அரசியல்வாதியை பழி வாங்குகிறார்கள்.


ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய தோள் மீது இப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையையும் அனாயசமாக சுமந்து, தன்னுடைய அனுபவிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்க்கிறார்.


வாழ்க்கையில் எந்த உயரத்திற்கு சென்றாலும், எப்போதும் தேவை அன்புதான் என்பதை அழுத்தமாக வலியுறுத்திக்கிறது டிரைவர் ஜமுனா. 


நெடுஞ்சாலை பயணம் ..வாகன பயணம்... வாரிசு அரசியல்.. கூலிப்படை. என இயக்குநரின் திரைக்கதைக்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பக்கபலமாக தோள் கொடுத்திருக்கிறார்கள்.


0 comments:

Pageviews