வதந்தி விமர்சனம்

 


கன்னியாகுமரி மாவட்டத்தில் பட பிடிப்பு நடக்கும் ஒரு நாளில் அந்த படத்தின் ஹீரோயின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்க படுகிறார். மீடியாவில் இந்த செய்தி வேகமாக பரவுகிறது. திடீரென இறந்த பெண் மீடியாவில் தோன்றி நான் இறக்கவில்லை உயிருடன் இருக்கிறேன் என்கிறார். அப்போ இறந்த பெண் யார்? எப்படி என்று காவல் துறை கண்டுபிடித்ததா என்று பல திருப்பாங்களோட எட்டு பாகங்களும் விறு விறுப்பாக செல்கிறது வதந்தி.


இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் முதல் வலைதள தொடர் இது. இதில் எஸ் ஜே சூர்யாநடிப்பில் மிரட்டியிருக்கிறார். வெலோனி என்னும் கதையின் மைய பாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நன்றாகவே நடித்திருக்கிறார். எழுத்தாளராக நடித்திருக்கும் நாசர் தன்னுடைய வழக்கமான இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு மனதை கவர்கிறார். லைலா துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா டார்க் ஹியூமர் டொயலாக்குகளை பேசி அதனையும் வட்டார வழக்கு மொழியில் பேசி புன்னகை பூக்க வைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் லைலா. அவருடைய உருவத்துக்கேற்ப ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார்.


இந்த கதையை இயக்குனர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் சில சுவாரசியமான திருப்பங்களை கொடுத்திருக்கிறார். உண்மையைத் தேடி காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் பயணத்தில் வரும் சுவாரசியமான திருப்பங்களே படத்திற்கு பலமாக இருக்கிறது.


வதந்தி கண்டிப்பாக பார்க்க வேண்டிய வெப்சீரிஸ். 

0 comments:

Pageviews