பட்டத்து அரசன் விமர்சனம்

 


மிகப்பெரிய கபடி வீரராக இருக்கும் ராஜ்கிரண். அரசு வேலையைவிட ஊரின் மானம்தான் பெரியது என்று ஊருக்காக கபடி விளையாடி வருகிறார். அவரது மகன் பேரன் என அனைவரும் ஊருக்காக கபடி ஆடுகின்றனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜ்கிரனின் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்ததாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். 

அதன்பின்பு பின்பு கபடி விளையாடத் தெரியாத அதர்வா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே 'பட்டத்து அரசன்' படத்தின் கதை. ஊருக்கும், குடும்பத்துக்கும் இடையே நடக்கும் கபடி சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப்படம். சற்குணம் வழக்கம்போல தனது கிராமத்து ஸ்டைலில் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஊரின் மரியாதைக்காக போராடும் பொத்தாரியாக வரும் ராஜ்கிரண், ராதிகா இருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். அதர்வாவும் சண்டிவீரன் படத்துக்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடித்துள்ளார். மொத்தத்தில் அதர்வா, சற்குணம் கூட்டணியில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது 'பட்டத்து அரசன்'.

0 comments:

Pageviews