நித்தம் ஒரு வானம் விமர்சனம்

 


அசோக் செல்வனுக்கு பெற்றோர் ஒரு பெண் பார்க்கின்றனர். அந்த பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார். மன அழுத்தத்தால் மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன். அசோக் செல்வனுக்கு இரண்டு கதைகளை படிக்கக் கொடுக்கிறார் அபிராமி. அந்த கதைகளில் தன்னையே ஹீரோவாக நினைத்துக் கொள்கிறார் அசோக் செல்வன். இரண்டு கதைகளிலும் சுவாரஸ்யமாக முடிவை நோக்கி செல்லும்போது கடைசி பக்கங்கள் இல்லாமல் இருக்கிறது. பின்னர்தான் அது கதையல்ல உண்மை சம்பவம் என அசோக் செல்வனுக்கு தெரிகிறது. கதையின் முடிவை அறிய நிஜ கதாப்பாத்திரங்களை தேடி செல்கிறார் அசோக் செல்வன். இந்த பயணத்தில் அசோக் செல்வனுடன் ரிது வர்மாவும் இணைகிறார். கதையில் படித்த ஆட்களை நிஜத்தில் அவர் சந்தித்தாரா? அவர்களுடைய கதைகள் இவரை எப்படி மாற்றியது? என்பது சுவாரஸ்யமான முழுநீள திரைப்படம் 


மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கெட்டப்களில் அசோக் செல்வன் அசத்தியுள்ளார். ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா என மூன்று பெண் கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியமானதாக உள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் ஒரு காதல் கதையை வாழ்க்கை கதையாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் டிராவல் நிறைந்த திரைக்கதையோடு படம் நகர்ந்து கடைசியில் நெகிழ்வான படமாக முடிந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து நிச்சயம் நித்தம் ஒரு வானம் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

0 comments:

Pageviews