மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் நடத்தும் 'ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்'

 யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் (20,000) யுவன் ரசிகர்கள் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், 'யுவன்25' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 'மஹா' திரைப்படத்தை தயாரித்ததோடு, 'கபாலி' 'VIP 2' போன்ற பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த நிறுவனம் தான் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் .

 *யுவன் 25* நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, நேஹா பாசின், விஜய் யேசுதாஸ், ஜாவேத் அலி, ஸ்வேதா பண்டிட், டீஜே, சாம் விஷால், பிரியங்கா, விஷ்ணுப்ரியா ரவி மற்றும் தொகுப்பாளராக டிடி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். 


இந்த பிளாக்பஸ்டர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் , தற்போது 21 ஜனவரி, 2023 (சனிக்கிழமை, மாலை 7 மணி) மலேசியாவில் நடக்கவிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் 'ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்' ( Hearts Of Harris ) என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

0 comments:

Pageviews