காந்தாரா திரை விமர்சனம்

 


847-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழும் அரசர் ஒருவரிடம் ஏராளமான நிலம், பணம், மரியாதை, என எல்லாமே தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. மனைவி, மக்கள் இருந்தும் நிம்மதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கும் அவர், வீட்டிலிருந்து வெளியேறி நிம்மதியைத் தேடி வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கிறார். அப்படி ஒரு காட்டுக்குள் நுழையும் அவர், அங்கு மக்கள் இணைந்து சாமியை வழிபடுவதை காண்கிறார். அதைக் கண்டதும் அந்த சாமியை கொடுத்து தனக்கு நிம்மதி கிடைக்க உதவுமாறு கோருகிறார். தொடக்கத்தில் மறுக்கும் அந்த பழங்குடி மக்கள், ஒரு சில நிபந்தனைகளுடன், அரசரிடம் நிலங்களைப்பெற்றுக்கொண்டு அவர்களின் கடவுளை கொடுத்துவிடுகின்றனர்.  அப்படியே கட் செய்தால், 1970-களில் நடக்கும் கதையில் அரசனின் பரம்பரையில் வந்தவர், அந்தப் பழங்குடி மக்களிடம் நிலத்தை கொடுக்க வலியுறுத்துகிறார். இதே நிலப் பிரச்சினையை 1990களில் நாயகனும் எதிர்கொள்கிறார். ஒருபுறம் பண்ணையார் ஒருவர் பழங்குடியினர் வாழும் நிலத்தை பறிக்க நினைக்கிறார்; மறுபுறம் கிராம மக்கள் வன பகுதியைஆக்கிரமித்துள்ளதாக அரசு தரப்பிலிருந்து புகார் எழுகிறது. இறுதியில் பழங்குடி மக்களுக்கான நிலம் மீட்கப்பட்டதா? இல்லையா? - இதை அவர்களின் பண்பாடு, கலாசாரத்துடன் சொல்கிற அழுத்தமான கன்னட படமான 'கந்தாரா'.


தி பெஸ்ட் சவுண்ட் டிசைன், அட்டகாசமான பின்னணி இசை, மிரட்டும் மேக்கிங் அப்படிங்கிறதுக்கு மீனிங் என்னன்னு தெரிஞ்சுக்கணும்ன்னா, ப்ளீஸ் இந்தப்படத்தை தியேட்டர்ல பார்த்துடுங்க.. சமீபகாலத்துல இப்படி ஒரு மிரட்டி எடுக்குற சவுண்ட் டிசைன் ஒர்க்கை பார்க்கவே இல்ல.. 


என்னடா இது ஃபர்ஸ்ட் ஆஃப் ஒரு மாதிரி போகுதேன்னு நினைச்சா, செகண்ட் ஆஃப் க்ளைமேக்ஸ்ல அரைமணி நேரம் வட்டியும் மொதலுமா சேர்த்து வெச்சி, மிரட்டி எடுத்துட்டுட்டாங்க.. ப்பா... என்ன மேக்கிங், என்னா ஆக்டிங், என்னா பி.ஜி.எம் ஒர்க்ன்னு பின்னிபெடலெடுத்துட்டாங்க. 


கூஸ்பம்ப்ஸ்'ன்னு சொல்ற பல ஆச்சர்யநொடிகளை கடைசி காட்சியில நீங்க உணரமுடியும்.. இந்த அனுபவம் நிச்சயம் ஓ.டி.டியில கிடைக்கவே கிடைக்காது.. சினிமா லவ்வர்ஸ் எல்லாருக்கும் தியேட்டர்ல ஃபுல் மீல்ஸ் விருந்து படைச்சிருக்காங்க (க்ளைமேக்ஸ்ல)..


அந்தக்காடும், மழையும், சாரலும்.. அடிக்குற மழையில நெருப்பு மூட்டி சாப்பிடுற அந்த இடத்தை அவ்ளோ ரசிச்சேன். எவ்ளோ இயல்பான மனிதர்கள், உண்மையான மலை, காடு, மரம் நிலப்பரப்புன்னு அச்சு அசல் லொக்கேஷன்.. Day for Night எடுத்து cheat பண்ற வேலையே இல்லாம, முழுக்க முழுக்க இரவுலையே.. அவ்வளவு தீப்பந்தத்தை ஷாட்ல யூஸ் பண்ணி  படமாக்கி இருக்காங்க.. லைட்டிங் பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டாங்களோ???


இன்னைக்கு இந்தப்படம் ஏன் இப்படி ஒரு பேயோட்டம் ஓடிட்டு இருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது.. டப்பிங் படம் பாக்குற எனக்கே இவ்ளோ கூஸ்பம்ப்ஸ் ஆகுதுன்னா.. ஒரிஜினல் கன்னடத்துல பார்த்தவன் எல்லாம் காட்டுகூச்சல் போடத்தானே செய்வான்..


Kantara - Must Must watch Movie

0 comments:

Pageviews