ஷூ திரை விமர்சனம்

 


ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்துநிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். தாம் கண்டு பிடித்த டைம் டிராவல் சூவை திலீபன் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார்.  திலீபன் மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன அந்தோணி தாசனின் மகள் பிரியாவிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து யோகி பாபுவின் கைக்கு அந்த ஷூ செல்கிறது. இதற்கிடையில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது ஒரு கும்பல். அந்த கும்பலிடம் குடிகாரரான அந்தோணி தாசன் தன்னுடைய மகள் பிரியாவையும் விற்று விடுகிறார். இந்த நிலையில் பிரியாவின் வாழ்க்கை என்னானது? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா? இறுதியில் இந்த ஷூவை திலீபன் கைப்பற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.


இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை சுற்றி கதை நகர்கிறது. டைம் டிராவல் கான்செப்டில் தமிழ் திரை உலகில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஷூ வில் டைம் ட்ராவல் மெஷினை வைத்து வித்தியாசமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். 


யோகி பாபு ரவுடியாக வருகிறார். அவர் வருகிற சீன்களில் எல்லாம் தியேட்டரில் ஆரவாரம். கடத்தப்படும் சிறுமிகளை மீட்கும் கதைநாயகனாக திலீபன் வருகிறார்.  சிறுமி பிரியாவாக வரும் ப்ரியா கல்யாண், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, படத்திற்கு பலம்.

0 comments:

Pageviews