சீன் நம்பர் 62 படத்தின் முதல் பாடலான 'என் சேவல்'

 


‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான  ‘சீன் நம்பர் 62'-ஐ  நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான 'என் சேவல்' சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


ஐயப்பனும் கோஷியும் மலையாளம் படத்தில் இடம்பெற்ற "களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு" பாடலை பாடிய, 68வது தேசிய விருது வென்ற நஞ்சியம்மா பாடிய பாடல் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. 


பாடலை கேட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல வெற்றி பாடல்களை பாடியுள்ள வேல்முருகன் நஞ்சியம்மாவுடன் இனைந்து இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் வரிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. சிவபிரகாசத்தின் வரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி முழு பாடலையும் எழுதியுள்ளார். 


இப்பாடலுக்கு ஜிகேவி மிகவும் பொருத்தமான முறையில் இசை அமைத்துள்ளார். பாடலின் காட்சியமைப்பு அனைத்தும் புதுமையாக உள்ளது என்று பாடலை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர். 


கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன் மற்றும் ராகந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புது முகமாக இருந்தாலும் அனைவரும் ரசிகர்களை கவரும் படியாக உள்ளனர். 


சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் 'சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது. 


போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொண்டுள்ளார். 


இந்த சேவல் கண்டிப்பாக பந்தயத்தில் ஜெயிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

0 comments:

Pageviews