மாமன்னன் படிப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்


இன்று (13.09.2022) உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 (ரூபாய் பதிமூன்று லட்சத்தி அறுபதாயிரம்) “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் வழங்கினார். உடன் Additional Collector பாலசந்தர், Salem District Cheif Educational Officer முருகன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில்,  மாமன்னன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் P.K.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியாடி) Convex Mirror 10 அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

ஜருகுமலையில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவித் தொகை “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்டது.

0 comments:

Pageviews