கேப்டன் விமர்சனம்

 


குறிப்பிட்ட வன பகுதிகளுக்கு செல்லும் ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க கேப்டன் ஆர்யா தலைமையிலான குழு காட்டுக்குள் இறங்குகிறது. அங்கு ஏலியன்கள் படையெடுத்து நிற்கிறது. இறுதியில் ஆர்யாவின் படை ஏலியன்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதே கேப்டன் படத்தின் கதை. 


கேப்டனாக வரும் ஆர்யா அந்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்துகிறார். ஆர்யாவுடன் நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் கதாபாத்திரம் சில காட்சிகளே வந்தாலும் படத்திற்கு தேவையானதாக அமைந்துள்ளது.


கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். அவருக்கான பெரிய காட்சிகள் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ரன் தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.


டி. இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்க்கு பலம். ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஏதாவதுதொரு சுவாரசியத்தை புகுத்தும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், இந்த படத்தில் ஏலியன்கள் சம்பந்தமான காட்சிகளை முடிந்த வரை, எவ்வளவு தத்ரூபமாக காட்ட முடியுமோ, அந்த அளவிற்கு காட்டி இருக்கிறார்கள்.

0 comments:

Pageviews