பபூன் திரை விமர்சனம்

 


காரைக்குடியில் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருக்கும் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் நாடக தொழில் நலிவடையும் காரணத்தால் வெளிநாடு செல்ல நினைக்கின்றனர். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் தற்காலிகமாக தனபால் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்கின்றனர். அப்போது ராமநாதபுரத்திலிருந்து உப்பை ஏற்றிக் கொண்டு இருவரும் வருகையில் லாரியில் உப்பிற்கு பதிலாக போதை பொருள் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்து இருவரையும் கைது செய்கின்றனர். இறுதியில் இருவரும் நிரபராதி என்று நிரூபித்தார்களா? அந்த போதைப் பொருள் லாரியில் எப்படி வந்தது? காவல்துறையினர் கடத்தல் மன்னனை கண்டுபிடித்தார்களா? என்பது தான் மீதிக்கதை.


படத்தின் ஹீரோ வைபவ்வாக இருந்தாலும், இவரை விட மற்றவர்கள் சிறப்பாக நடித்து உள்ளனர். மாவட்ட எஸ்பி யாக வரும் தமிழரசன் ஓரளவு நிஜ போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துக்கிறார். வைபவ் நண்பராக வரும் அந்தகுடி இளையராஜாவின் உடல் மொழியும், குரல் வளமும் மிக சிறப்பாக உள்ளது.

 அனகா இலங்கை பெண்ணாக நடித்து, வித்தியாசமான நடிப்பை தந்திருகிறார். சிறிது நேரமே வந்தாலும் திரையை அழுத்தமாக ஆக்கிரமிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அவருடைய மிகையில்லாத நடிப்பும் உடல் மொழியும் அழகாக ரசிக்க வைக்கின்றன. ஆடுகளம் நரேன், வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையும்பாடல்களும் கதைக்குப் பலம் சேர்க்கின்றன. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் பகுதிகளின் கடல் காட்சிகள் ஈர்க்கின்றன. மொத்தத்தில் ‘பபூன்’ கண்டிப்பாக ரசிக்கலாம்.

0 comments:

Pageviews