ட்ரிகர் விமர்சனம்

 


காவல்துறை அதிகாரியான அதர்வா ஒரு சிறிய பிரச்சினை காரணமாக சஸ்பென்ட் செய்யப்படுவார். பின்னர் தனது உயர் அதிகாரியால் undercover போலீஸாக காவல்துறை செய்யும் தவறுகளை கண்காணிக்கும் பணிக்கு மற்றப்படுவார். அப்படி கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது குழந்தைகள் சிலரால் கடத்தப்படுவார்கள்.  ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளை நூதனமுறையில் ஒரு கும்பல் கடத்தி வருவது தெரியவரும். அந்த குழந்தைகளை  போலீசான அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ட்ரிகர் படத்தின் கதை.


வழக்கமான போலீஸ், கடத்தல் கும்பல் இடையே நடக்கும் பிரச்சனைகளை சற்று வித்தியாசமான முறையில் ஆக்ஷன் காட்சிகளுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன். 100 படத்தை போலவே இந்த படத்திலும் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார். ஃபிட்டான உடலுடன் தனக்கே உரித்தான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா. அதர்வா ஜோடியாக தன்யா நடித்துள்ளார். காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே காதல் உள்ளது. தான்யாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார். சின்னி ஜெயந்த், முனிஷ்காந்த், நிஷா, அன்பு என பலர் இருந்தாலும் பெரிய அளவில் காமெடி காட்சிகள் இல்லை. ஜிப்ரானின் இசை வழக்கம்போல் விறு விறுப்பைக் கூட்டி இருக்கிறது. கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவு அதன் காட்சி வடிவமாக இருக்கிறது. ஆதரவற்ற குழந்தைகளின் நிலை குறித்தும் விவாதிப்பது படத்தின் பலமாக இருக்கிறது.


மொத்தத்தில் வித்தியாசமான கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ட்ரிகர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.

0 comments:

Pageviews