கோப்ரா விமர்சனம்
யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் விக்ரம் தன் பணத்தேவைக்காக KS.ரவிகுமாரிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார் , அவர் என்ன சொன்னாலும் செய்கிறார், KS.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய சொன்னாலும் பணத்திற்காக எதையும் யோசிக்காமல் அவர் சொல்லும் அனைவரையும் கொலை செய்கிறார், மற்றும் KS.ரவிக்குமார் இவரை படிக்கவும் வைக்கிறார், இப்படி கொலை செய்து கொண்டிருக்கும் விக்ரமிற்கு ஒரு ஆபத்து வருகிறது அந்த ஆபத்தை தனது கணித திறமையால் எப்படி சரி செய்கிறார் என்பதும் இதற்கிடையில் நாயகி ஸ்ரீநிதி விக்ரமை காதலிக்கிறார் இவரது காதல் திருமணத்தில் முடிந்ததா ? இல்லையா ? என்பதும் மீதி கதை.
கொடுத்த டிக்கெட் பணத்திற்கு முதல் பாதியே போதும் எனும் அளவிற்கு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிலும் அந்த இன்டெர்வல் டிவிஸ்ட் எல்லாம் வேற லெவல். மொத்த படத்தையும் தூக்கி சுமப்பது பாதி விக்ரம் என்றால் மீதி இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். காட்சிகள் எப்படி இருந்தாலும் பிண்ணனி இசையில் எந்த குறையும் இல்லை எனும் அளவுக்கு பின்னணி இசை கொடுத்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு 9 கெட்டப்கள் இருக்கும். இந்த மாதிரியான கெட்டப்க்கு மெனெக்கெடுவதற்கு தன்னை விட்டால் வேறு யாரும் இல்லை எனும் அளவுக்கு மெனெக்கட்டு செய்துள்ளார் விக்ரம். ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் , மிர்னாலினி ரவி , மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ் இவர்கள் அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை சிறப்பாகவே செய்துள்ளனர், இந்த கதையை இயக்குனர் அஜய் ஞானமுத்து மிக அழகாகவும் அவரது பாணியில் சற்று விறுவிறுப்பாகவும் கொண்டுசென்றுள்ளார்
0 comments:
Post a Comment