”சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!!

 


நடிகர் அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள “சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தமிழ்நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக ரசிகர்களை சந்திக்க பயணித்தார். வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும், பேரன்பிலும் மிதந்த அருண் விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, & வேலூர் ஆகிய நகரங்களில் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 & செப்டம்பர் 2, 2022) நடந்த இந்த பயணம்  வெற்றிகரமாக முடிவடைந்ததது. இந்த நகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நடிகர்கள் வருகை தந்தது ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆர்பரித்த கூட்டத்தின் நடுவே ரசிகர்களிடம் அன்போடு பழகிய  அருண் விஜய் குணம்  அனைவரையும் கவர்ந்தது. செப்டம்பர் 16, 2022 அன்று வெளியாகும் “சினம்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.


“சினம்” அருண் விஜய் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் மற்றும் குடும்ப பார்வையாளர்களும்  ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. மனதைக் கவரும் பாடல்களும்,  ரசிகர்களை மயக்கும் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன.


சினம் படத்தினை Movie Slides Pvt. Ltd  சார்பில் R. விஜயகுமார் தயாரித்துள்ளார்.  இயக்குநர் GNR குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஷபீர் (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மைக்கேல் BFA (கலை), A ராஜாமுகமது (எடிட்டர்), R சரவணன் (கதை-உரையாடல்கள்), ஆரத்தி அருண் (காஸ்ட்யூம் டிசைனர்), மதன் கார்க்கி-ஏக்நாத்-பிரியன்-தமிழனங்கு ( பாடல் வரிகள்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).

0 comments:

Pageviews